Wednesday,January,04,2012இலங்கை::கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
25-30 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர்கியூஸன் வீதியில் 28 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமொன்று இன்று காலை 6.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கிரேண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை நபர் ஒருவரின் சடலம் மீட்பு!
கிரேண்ட்பாஸ் பாலத்துறைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.
வெள்ளை வானில் கடத்தப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் புத்திக தினேஷ் எனவும் நேற்று முன்தினம் தனது மகன் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment