Wednesday, January 4, 2012

காஷ்மீரை தாக்க, பாகிஸ்தான் தீவிரவாத பெண்களுக்கு பயிற்சி

Wednesday,January,04,2012
காஷ்மீர்:இந்திய மாநிலமான காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா பெண்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-ஏ-தொய்பா இ‌யக்கத்தில் 21 பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், இது உண்மை தகவல் என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான முசாபராபாத் நகரில் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தினர் பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாகவும் இந்திய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக இந்த குழுக்களுக்கு தக்தரீன்-ஏ-தொய்பா என புதிய பெயரிடப்பட்டுள்ளது என்றும் அந்த இராணுவ அதிகாரி ‌தெரிவித்துள்ளார். காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானுடன் இணைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment