Wednesday ,January ,04, 2012புதுடில்லி:இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் புதிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, இம்மாதம் 16ம் தேதி இலங்கை செல்ல இருப்பதாக மத்திய அரசு தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, இச்சுற்றுப்பயணத்தில் விவாதிக்கப்படும் என்று கிருஷ்ணா, சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள், இதில் ஆய்வு செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. இலங்கை செல்லும் கிருஷ்ணா, அங்கு அதிபர் ராஜபக்ஷே, வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸ் உள்ளிட்டோர்களை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அமைச்சரின் சுற்றுப்பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக இலங்கை தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment