Pages

Tuesday, January 3, 2012

தானே புயல் : நிவாரண பணிகள் குர்ரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை!

Tuesday, January 03, 2012 12
சென்னை: கடலூர் மற்றும் புதுச்சேரியை பந்தாடிய தானே புயலால், கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி பரிதவிக்கின்றனர். மேலும், தங்கள் கஷ்டங்களுக்கு தீர்வினை கோரி, பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மட்டும் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு தினமும் மீட்புப் பணிகளை கவனித்து வருகிறது. ஆனாலும், அங்கு ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என்றும் மக்கள் குமுறுகின்றனர். இதுதொடர்பாக கடலூரில் நேற்று பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை இன்று நடத்துகிறார். இதில் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அதன் பின்னர் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment