Pages

Tuesday, January 3, 2012

புலம்பெயர் நாட்டு புலிகளின் தரப்பினர் யாழ்ப்பாணத்திற்கு சென்று முன்னாள் புலிபோராளிகளைசந்தித்து ரகசிய பேச்சுக்களை நடத்தியுள்ளனர்-திவயின!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து உறவினர்களை பார்க்க வருவதாக கூறி, சுற்றுலா விசா அனுமதிப்பெற்று இலங்கை செல்லும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் தரப்பினர், யாழ்ப்பாணத்திற்கு சென்று, முன்னாள் போராளிகளை சந்தித்து ரகசிய பேச்சுக்களை நடத்தியிருப்பதாக திவயின தெரிவித்துள்ளது. இதனால் புலிகளின் சகல செயற்பாடுகள் தொடர்பாகவும் கடும் அவதானத்துடன் இருக்குமாறு புலனாய்வு பிரிவினர் வடக்கில் உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் முன்னாள் புலிப்போராளிகளை தூண்டிவிட முயற்சித்தவர்களுக்கு பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து மீண்டும் புலிகள் அமைப்பை ஆரம்பிக்க புலிகளின் சர்வதேச வலையமைப்பு ரகசியமாக மேற்கொண்டு வரும் திட்டம் குறித்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி வசதிகள் கிடைத்துள்ளதால், லக்ஷான்பேர்க், டொரான்டோ, ஒஸ்லோ ஆகிய நகரங்களில் இருந்து செயற்படும் புலிகளின் சர்வதேச தலைவர்கள் ஏனைய புலி உறுப்பினர்களுடன் தொடர்ந்தும் உரையாடி வருவதாக தெரியவந்துள்ளது எனவும் திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment