Thursday, January 5, 2012

50 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் கைது!

Thursday,January 05, 2012
இலங்கை::நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள எட்டு வீடுகளில் 50 இலட்சம் ரூபா பெறுமதியன நகைகள் பணம் மற்;றும் பல்வேறு பொருட்களை திருடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் நகைகளை மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ தெரிவித்தார்..

நீர்கொழும்பு தளுபத்த , தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது சேய்யப்பட்டவராவார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த பெரேரா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்-விக்கிரமசிங்க பொலிஸ் கான்ஸ்டபிள்களான சேனாரத்ன ,உக்குபண்டா ,அரிச்சந்திர , வீரதுங்க ஆகியோரை கொண்ட குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment