Pages

Friday, December 9, 2011

TNAயின் மூன்று யோசனைகளை தவிர அவர்கள் முன்வைத்துள்ள ஏனைய யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது-கெஹெலிய!

Friday, December 09, 2011
இலங்கை:TNAயின் 3 யோசனைகள் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், TNAயின் மூன்று யோசனைகளை தவிர அவர்கள் முன்வைத்துள்ள ஏனைய யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது-கெஹெலிய ரம்புக்வெல்ல:

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தினால், காவற்துறை அதிகாரம் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த மூன்று யோசனைகளுக்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் கருதி செயற்படாது, நாட்டை நேசிக்கும் வகையில் செயற்படுவது முக்கியமானது எனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறை அதிகாரம், வடக்கு கிழக்கை இணைத்தல், காணி அதிகாரம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற யோசனையை விட தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கிறன எனவும் கெஹெலிய கூறியுள்ளார்.

மத்திய அரசாங்கத்திற்கு எப்போதுமே தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புகள் உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி மூன்று யோசனைகளை தவிர, அவர்கள் முன்வைத்துள்ள ஏனைய யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment