Pages

Friday, December 9, 2011

2ம்-இணைப்பு-கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு!

Friday, December 09, 2011
கொல்கத்தா: கொலகத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் இன்று அதிகாலை சரியாக 3.30 மணியளவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் தீயில் சிக்கி பலியாகினர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கொல்கத்தா தக்குரியா என்ற பகுதியில் உள்ள ஏ.ஐ.எம்.ஆர் மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கிக் கொண்ட நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையின் மூன்று கட்டித்தில், ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள நச்சு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் உண்டான தீ, அடுத்தடுத்து உள்ள மாடிகளிலும் பரவி பெரும் விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுப்பட்டு விபத்தில் சிக்கி தவித்த மக்களை மீடடனர். இதில், 40 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனிடையே விபத்துக்கு மினகசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ள ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு அம்மாநில முதல்வர் மம்மதா பானர்ஜி நேரில் சென்று மீட்பு பணியை கண்காணித்து வருகிறார்.

No comments:

Post a Comment