Pages

Thursday, December 8, 2011

இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதராக சல்மான் பஷீர் நியமனம்

Thursday,December, 08, 2011
இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கான புதிய பாகிஸ்தான் தூதராக சல்மான் பஷீர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை பாக்., பிரதமர் கிலானி அளித்துள்ளார். தற்போதைய தூதராக பணியாற்றிவரும் ஷாகித் மாலிக்கின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கால நீட்டிப்பு காரணமாக அவர் தொடர்ந்து தூதராக பணியாற்றி வந்தார்.

இம்மாத இறுதியில் அவரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, சல்மான் பஷீர் புதிய தூதராக நியமிக்கப்பட உள்ளார். மேலும் பாகிஸ்தான் உட்பட 15 நாடுகளுக்கான புதிய தூதர்களையும் பிரதமர் கிலானி நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment