Pages

Thursday, December 8, 2011

ஐரோப்பாவில் இயங்கி வரும் புலிப் பாடசாலைகளினால் ஆபத்து ஏற்படக் கூடுமென இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

Thursday,December, 08, 2011
இலங்கை: ஐரோப்பாவில் இயங்கி வரும் புலிப் பாடசாலைகளினால் ஆபத்து ஏற்படக் கூடுமென இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பா முழுவதிலும் சுமார் 350 புலி பாடசாலைகள் இயங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பாடாசலைகளில் தமிழீழ விடுதலைப் புலிக் கொள்கைகள் பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புலிப் பாடசாலைகளில் சுமார் 20000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அதிகளவில் இவ்வாறான பாடசாலைகள் இயங்கி வருகின்றன எனக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளின் கொள்கைகளை பரப்புவதற்கு மட்டுமன்றி பணத்தை சம்பாதிக்கும் இந்தப் பாடசாலைகளை சில புலி ஆதரவு அமைப்புக்கள் ஐரோப்பாவில் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

சில பாடசாலைகளில் யுத்தப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை பறைசாற்றும் வகையில் பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதாள உலகக் கோஷ்டி செயற்பாடுகள், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற வழிகளில் ஐரோப்பாவில் புலிகளின் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment