Pages

Sunday, October 9, 2011

முல்லேரியா பகுதியில் பலத்த பாதுகாப்பு!

Sunday, October 09, 2011
முல்லேரியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் என். கே இளங்ககோன் குறிப்பிட்டுள்ளார்.

பொலி்ஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் முல்லேரியா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கை நேற்று மாலை முதல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.

மூவரின் உயிரகளை காவு கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்ககளம் தற்போது மேற்கொள்ளும் விகாரணைகள் நிறைவடைந்தவுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் மாஅதிபர் என். கே இலங்கோன் தெரிவித்தார்

No comments:

Post a Comment