Pages

Sunday, October 9, 2011

தொம்பே சம்பவம் தொடர்பில் 25 பேர் கைது!

Sunday, October 09, 2011
தொம்பே பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மெக்ஸி புரொக்டர் குறிப்பிட்டார்.

குற்றப்பலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி பிரதேச மக்களால் தொம்பே பொலிஸ் நிலையம் மீதி தாக்குதல் நடத்தப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டது.

பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தொம்பே பொலிஸ் நிலையத்தின் 05 உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment