Monday, October 03, 2011இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க முடியாது என மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்டு மீனவர்களும் பொதுவாக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் நிலவுவதாக அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு மீனவர்களும் தத்தமது கடல் பிரதேசங்களில் மீன்பிடியில் ஈடுபட வேண்டுமே தவிர, அத்துமீறல்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment