Tuesday, October 04, 2011குற்றவியல் வழக்குகளில் சரணடைவதற்கு உடன்பாடு மற்றும் நீதித்துறை உதவி போன்ற துறைகள் குறித்த கலந்துரையாடல் ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் இலங்கைக் கிடையில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
குறி;த்த இரண்டாவது சுற்று கலந்துரையாடல் அபுதாபியில் இடம்பெறுகிறது.
இது தொடர்பான முதலாவது சுற்று கலந்துரையாடல் கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்றது என நீதி அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு துறை இயக்குநர், நீதிபதி அப்துல் ரகுமான் முராத் அல் பலூஷி தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பு அனுகூலமாக பிரதிபலன்களை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரணடைவதற்கு மற்றும் குற்றவியல் விடயத்தில் நீதிமன்ற உதவி கோரிக்கை நிலைகளில் விவாதம் ஒரு பொதுவான சூத்திரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து, இரண்டு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அப்துல் ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment