Pages

Saturday, September 10, 2011

குற்றவியல் சட்டமூலத்தில் திருத்த இணைப்புகள்!

Saturday, September 10, 2011
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமானவர்களை 24 மத்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்கு ஏற்றவகையில் குற்றவியல் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

எமது செய்திச் சேவைக்கு அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இந்த தகவலைத் தெரிவித்தார்.

15 வகையான பாரிய குற்றங்கள் தொடர்பில் இந்த சட்டம் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்ட நிலையில் குறித்த சட்டமூல திருத்தம் கொண்டுவரப்படுவது அவசியம் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவசர கால சட்ட நீக்கத்தின் பின்னர் குற்றவியல் சட்ட விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு புதிய 3 விதிமுறைகள் அண்மையில் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீமினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment