



Saturday, August 20, 2011
மேலத்தேய நாடுகளின் புலிகளின் ஆதரவு நிறுவங்களால், இலங்கைக்கெதிராக தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு, அந்நிறுவனங்கள் தமக்கென சித்தரித்த நிகழ்ச்சிகளை கொண்டிருக்கின்றன என பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
அரசாங்கமானது இப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு, விடுதலைப்புலிகளால் பயணக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 300,000 பொதுமக்களை காப்பாற்றியமை, 11,000 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்தமை, முன்னாள் புலி சிறுவர் போராளிகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பி சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுத்தமை போன்ற செயற்பாடுகள் மூலம் பதில்கொடுத்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்புக்கான மூலோபாய முன்முயற்சியின் ”www.outofwar.com” எனும் அலுவலக இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்துக்கொண்ட போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போதயை ஜனாதிபதி அல்லது அரசாங்கம் காரணமாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கும் சில வெளிநாட்டுச் சக்திகள் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுகளை சரிபடுத்தி, வேறு சக்திகள் மூலம் அதிகாரத்தை ஏற்படுத்த முயல்கின்றன என தெரிவி்த்தார்.
தேசிய நிறுவனங்களின் சம்மேளனத்தின் அவைக்கட்டுநர் டாக். குணதாச அமரசேகரவால் நிகழ்த்தப்பட்ட வரவேற்புரையைத் தொடர்ந்து, இந் நிகழ்வை வைபவ பூர்வமாக தலைமை தாங்கிய முன்னாள் தற்காலிக தலைமை நீதிபதியும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான ராஜாஹ் வனசுந்தரவால் இணையத்தளத் ஆரம்பிதது வைக்கப்பட்டது.
இங்கு அமெரிக்க ஜோர்ஜ் பல்கலைகழக பேராசிரியர் அசோகா பண்டாரகேவால் “உலகமயமாதல் மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு” எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன், சட்ட சிரேஷ்ட சட்டத்தரணி மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. மலிந்த செனவிரத்தின ஆகியோரும் உரையாற்றினர்.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் மூன்று புத்தக வெளியீடுகளும் இடம்பெற்றன. இம் மூன்று வெளியீடுகளும் “பயங்கரவாத்தை தோற்கடிக்க இலங்கை மேற்கொண்ட முக்கிய செயற்பாடுகள்” எனும் கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளன.
தூதுவர்கள், வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர், தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment