Saturday, August 20, 2011
கற்பிட்டி – நிர்மல சிங்கள மஹா வித்தியாலயத்தின் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையில் இருந்த உதவி காவற்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு அவர் வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது கிறீஸ் பூதம் என எண்ணி பிரதேவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயமடைந்த உதவி காவற்துறை அதிகாரி கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற பிரதேச மக்கள் காயமடைந்தவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வைத்தியசாலை உடமைகள் சிலவற்றிற்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கற்பிட்டி வைத்தியசாலை ஊழியர்கள் இன்றைய தினம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக சேவை புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment