Sunday, August 21, 2011

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடப்பட மாட்டாது-மாவை சேனாதிராஜா!

Sunday, August 21, 2011
இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு நாடாளுமன்றக் குழு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்வதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment