Pages

Sunday, August 21, 2011

பிரபாகரன் உயிருடன் இருந்தால் கொழும்பு ஏழில் உள்ள வீடொன்றில் இருந்திருப்பார் - பொன்சேக்கா!

Sunday, August 21, 2011
தனது சிறைக்கூடத்திற்கு மின்விசிறியொன்றை பொறுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவை பெற நேரிட்ட போதிலும் கே.பியை கொழும்பு ஏழில் உள்ள வீடொன்றில் வைத்து தாலாட்டி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துவரப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவரும் கொழும்பு ஏழு இல் உள்ள வீடொன்றில் இருந்திருப்பார் என தெரிவித்த சரத் பொன்சேக்கா இராணுவ வீரர்கள் இது தொடர்பில் நன்கு அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment