Pages

Sunday, August 21, 2011

கிறீஸ் பூத பீதியளிக்க குறுஞ்செய்தி அனுப்பிய யுவதி கைது!

Sunday, August 21, 2011
காவல்துறையினரால் கிறீஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடபிலான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மக்கள் மத்தியில் நிலவும் பீதி மற்றும் சந்தேகம் என்பவற்றை களைய முடியும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கிறீஸ் பூதங்கள் என நாமமிட்டு குறுஞ்செய்திகளை அனுப்பி அச்சுறுத்திவந்த யுவதி யொருவருக்கு துல்கிரிய நீதிமன்றத்தால் இன்று விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய யுவதி கேகாலை ரங்வலவில் உள்ள பிரதி அதிபர் ஒருவரின் முறைப்பாட்டுக்கு இணங்கவே கைது செய்யப்பட்டிருந்தார்..

No comments:

Post a Comment