Pages

Monday, July 15, 2019

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 தேவை பட்ட நிலையில்  இங்கிலாந்து அணியால் 14 ரன்கள் மட்டுமே இழந்து 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆனாது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது.
 
16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

No comments:

Post a Comment