Pages

Friday, July 5, 2019

மரண தண்டனையினை நிறைவேற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை கொழும்பு – உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றினை இன்று(05) பிறப்பித்துள்ளது.
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment