Pages

Saturday, November 3, 2018

நாடே எதிர்ப்பார்த்துள்ள நாடாளுமன்ற பெரும்பான்மை தொடர்பில் கோட்டாவின் அதிரடி அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நிலையத்தில நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியையும், பிரதமரையும் பிரதிநிதித்துவப்படுத்தி, குறித்த சந்திப்பில் தாம் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதைய நிலைமையை மேலும் பிரச்சினைக்குரிய நிலைமைக்கு கொண்டு செல்லாமல் தீர்ப்பது குறித்தும், அலரி மாளிகை தொடர்பிலும், ரணில் விக்கிரமசிங்வின் பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடியதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment