Pages

Monday, May 1, 2017

TNA கட்சியில் முன்னாள் புலிகளை இணைக்க முடிவு!

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை தமது கட்சியில் இணைத்து கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.
தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சியாகும்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
புலிகளின் உறுப்பினர்களின் புனர்வாழ்வு, வாழ்வாதாரம், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment