Pages

Tuesday, September 15, 2015

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Tuesday, September 15, 2015
வெலிவேரிய - ரத்துபஸ்வெல குடிநீர் பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஆர்ப்பாட்டகாரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை கைது செய்யுமாறு கோரி பிக்குகளும் பொது மக்களும் இணைந்து கட்டுநாயக்க  விமானநிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
 
பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன குறித்த சம்பவத்திற்கு பின்னர் துருக்கி தூதுவராலயத்தில் கடமைபுரிந்து வந்த நிலையில் இன்று இலங்கைக்கு நாடு திரும்பினார்.
இவர் நாடு திரும்புவதை அறிந்த  பொது மக்கள் இவரை கைது செய்யுமாறு கோரி கட்டுநாயக்க  விமானநிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதேவேளை  புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பாக அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment