Pages

Monday, September 14, 2015

பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பலி!

Monday, September 14, 2015
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில்  நேற்று அதிகாலை பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் காரணமாக இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சோகன் லால் என்பவர் கொல்லப்பட்டார்.

இதேபோல் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லை பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment