Monday, August 10, 2015

சிலந்திகளாக புலிகள்! LTTE அங்கத்தவர்கள் சுயேச்சை குழுவாகப் போட்டியிடுகிறார்கள்!

டி.பி.எஸ்.ஜெயராஜ்: பதிவு செய்யப்பட்ட 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்கள் என்பனவற்றிலிருந்து  6,151 வேட்பாளர்கள் 2015 ஓகஸ்ட் 17 ல் நடைபெறுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். இதில் 21 கட்சிகளிலிருந்து 3,653 பேர்களும் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து 2,498 பேர்களும் போட்டியிடுகிறார்கள். எதிர்பார்த்த வகையில் பொதுவான தனிக் கவனம் தேசிய ரீதியிலும் மற்றும் பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற பிரதான அரசியல் கட்சிகள் மீதே செலுத்தப்பட்டுள்ளது. எனினும் வடக்கில் போட்டியிடும் குறிப்பிட்ட சுயேச்சைக் குழு ஒன்று அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது எதனாலென்றால் அந்தக் குழு தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
 
பல வகையான முன்னாள் புலிப் போராளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழு இலக்கம் 4 ல் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களைக் கொண்டிருந்தபோதும், அதன் சனத்தொகை குறைவடைந்துள்ளமையினால் அதிலிருந்து இம்முறை ஏழு அங்கத்தவர்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட உள்ளார்கள், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் பத்து பேர்கள் உள்ளார்கள். சுயேச்சைக் குழு இலக்கம் 4 க்கு அதன் சின்னமாக சிலந்தி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பத்து பேர்களில் ஒருவர் மட்டும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் இல்லை. அவர் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து பிரசுரமாகும் முறையே உதயன் மற்றும் சுடரொளியின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆவார். வித்தி  என்று பிரபலமாக அழைக்கப்படும் வித்தியாதரன் இந்த சுயேச்சைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார்.
 
அந்தப் பட்டியலில் உள்ள ஏனையவர்கள் வேந்தன் என்கிற சிவநாதன் நவீந்திரன், துளசி என்கிற கணேசலிங்கம் சந்திரலிங்கம், காமினி என்கிற ராசையா தருமகுலசிங்கம், சாள்ஸ் என்கிற காளிக்குட்டி சுப்பிரமணியம், இயல் என்கிற குமாரவேலு அகிலன், கங்கை ஆத்மன் என்கிற தங்கராசா தேவதாஸன்,
கங்கை அழகன் என்கிற விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், தனி அரசன் என்கிற வீரன் சக்திவேல் மற்றும் ரவிராஜ் என்கிற சிவகுரு முருகதாஸ் ஆகியோர்கள். இவர்கள் அனைவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் 2009ல் யுத்தம் முடிவடைந்ததும் இவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டதின் பின்னர் இவர்கள் விடுவிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கால்களை இழந்து அங்கவீனர்களாக இருந்தபடியால் விடுதலை பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. புலிச் சின்னத்தில் போட்டியிடுபவர்களில் அநேகர் இன்னமும் தங்கள் உடல்களில் உலோகத் துண்டுகளை காவித் திரிகிறார்கள்.

இந்த வேட்பாளர்களுக்கிடையில் வேந்தன் என்கிற நவீந்திரன் பின்னாளில் பெருமளவு செய்திகளில் அடிபட்டவராவார், அநேக பத்திரிகைகள் இந்த முன்னாள் – புலி எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெயப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பதை பிரபலப் படுத்தியிருந்தன. யுத்தத்தில் ஒரு காலை இழந்துள்ள வேந்தன் எல்.ரீ.ரீ.ஈ யினரின் வான்புலிகளில் ஒரு அங்கத்தவர் கூட. துளசி என்கிற சந்திரலிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் நிருவாகச் செயலகத்தை சேர்ந்தவர். காமினி என்கிற தர்மகுலசிங்கம் எல்.ரீ.ரீ,ஈ யினது சாள்ஸ் அன்ரனி காலாட் படை பிரிவில் பணியாற்றி ஒரு படைப் பிரிவிற்கு தலைமையேற்றவர். சாள்ஸ் என்கிற சுப்பிரமணியம் எல்.ரீ.ரீ.ஈயின் கிட்டு பீரங்கிப் படையணியில் அங்கத்தவராக இருந்தவர். இயல் என்கிற அகிலன் எல்.ரீ.ரீ.ஈயின் கல்வி அபிவிருத்திச் செயலகத்தில் பேபி சுப்பிரமணியத்தின் கீழ் கணணி இயக்குபவராக பணியாற்றியுள்ளார். ஏனையவர்களான கங்கை ஆத்மன் என்கிற தேவதாசன் எல்.ரீ.ரீ.ஈ யின் அச்சமூட்டும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மானின் கீழ் ஒரு புலனாய்வாளராக வேலை செய்துள்ளார். கங்கை அழகன் என்கிற மோகனசுந்தரம் எல்.ரீ.ரீ,ஈ யின் பொலிஸ் பிரிவான காவல்துறையில் அதன் முன்னாள் ஐ.ஜி.பி யாக இருந்து பின்னாளில் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவுத் தலைவராக மாறிய நடேசனின் கீழ் ஒரு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். தனி அரசன் என்கிற சக்திவேல் எல்.ரீ.ரீ.ஈ யின் வானொலியான புலிகளின் குரலில் பணியாற்றியுள்ளார். ரவிராஜ் என்கிற முருகதாஸ் ரீடொர் எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ யின் தமிழீழழ பொருளாதார அபிவிருத்தி பிரிவில் பணியாற்றியவர். முன்பு குறிப்பிட்டது போல தற்பொழுது ‘மலரும்’ எனும் இணையத்தளத்தை நடத்திவரும் ஊடகவியலாளரான வித்தியாதரன் மட்டும் எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு அங்கத்தவர் இல்லை. எனினும் வித்தி தன்னை இப்போது ஒரு ஊடகப் போராளி என வர்ணித்து வருகிறார்.
vithi
சிலந்திகளாக மாறும் புலிகள்.
 
 
சிலந்தி சின்னத்தில் சுயேச்சைகளாக போட்டியிடும் அனைத்து முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுமே தங்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்தவர்கள். அவர்களில் சிலர் உயர் தரத்தினையும் முடித்துள்ளார்கள். யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி இருப்பதினால் பெரும்பாலான முன்னாள் – புலிகள் சமூத்துடன் மீள் ஒருங்கிணைவதை கடினமாகக் காண்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகளும் கூட அரிதாகவே உள்ளன. ஆயுதம் தாங்கிய பல முன்னாள் தோழர்கள் செய்ததைப் போல வெளி நாடுகளுக்குச் செல்லவும் இவர்களுக்கு இயலாமல் உள்ளது. அந்தப் பின்னணியில் தேர்தலில் போட்டியிடும் தறபோதைய நடவடிக்கை ஒரு ஆக்கபூர்வமான சவாலகவே உள்ளது, தவிரவும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஜனநாயகத்தை தழுவியுள்ளார்கள் மற்றும் புலிகள் சிலந்திகளாக மாறுகிறார்கள் என்று உலகத்துக்கு எடுத்துக்காட்டக் கூடியதாகவும் உள்ளது.
 
முன்னாள் புலிகளின் தேர்தல் திட்டத்தின் பின்னாலுள்ள இயக்கும் சக்தியாக வித்தியாதரன் இருக்கிறார். சுயேச்சைகளாகப் போட்டியிட்டாலும் முன்னாள் எல்.ரீ.ரீ,ஈ அங்கத்தவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பான ‘ஜனநாயகத்துக்கான போராளிகள்’ எனும் இயக்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர், எனினும் அந்த அமைப்புடன் தொடர்பு பட்டவர்கள் ஆங்கிலத்தில் அதை ஜனநாயகத்துக்கான புனிதப் போராளிகள் எனும் அர்த்தம் வரும்படி ‘குருசேடர்ஸ் ஒப் டெமோகிரசி’ (சி.எப்.டி) என்றே விளக்குகிறார்கள் பெரும்பாலான ஆங்கில ஊடகங்களும் அதை அப்படியே (சி.எப்.டி என) குறிப்பிடுகின்றன.
 
இந்த “சொல் விளையாட்டு’ கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளால்  நடத்தப்பட்டதை இப்போது நினைவு படுத்துகிறது. எடுத்துக்காட்டாக 1949ல் இலங்கை தமிழரசுக் கட்சி (ஐ.ரி.ஏ.கே) உருவாக்கப் பட்டபோது, அந்தக் கட்சி ஆங்கிலத்தில் பெடரல் கட்சி (எப்.பி) என்றே சித்தரிக்கப் பட்டது. அதன் நேரடி ஆங்கில மொழி பெயர்ப்பை விட வித்தியாசமானதாக இது இருந்தது. இந்த முரண்பாடு சிங்களவர்கள் மத்தியில் அந்தக் கட்சியை சந்தேகத்துக்கு இடமானதாக்க வழி செய்தது, சமஷ்டி என்கிற போர்வையில் அந்தக் கட்சி தனி நாட்டை உருவாக்க விரும்புகிறது என்று சிங்களவர்கள் நினைத்தார்கள். சமஷ்டி பற்றிய இந்த கற்பனையான அச்சம் சில வட்டாரங்களில் இன்னும் உள்ளது.
சி.எப்.டி கட்சியை அமைப்பதைப் பற்றிய அறிவிப்பு ஜூலை மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள  புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வெளியில் வைத்து நடத்தப்பட்டது. இதிலும் கூட குறிப்பிடத்தக்க சில சங்கேத அர்த்தங்கள் உள்ளன. நல்லூர் கந்தசாமி கோவில் சுற்றாடலில் வைத்துத்தான் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் அரசியல் தலைவர் திலீபன் என்கிற இராசையா பார்த்திபன் 1987ல் சாகும்வரையான தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். செப்ரம்பர் 26ல் அவர் அமரரானார். வித்தியாதரனுடன் சோந்து ஏனைய முன்னாள் புலிகள் நல்லூர் கோவில் முன்னுதாரணத்தை அமைத்தது திலீபனையும் மற்றும் சாகும்வரையான அவரது பட்டினிப் போராட்டத்தை நினைவு படுத்துவதற்கே. கோவில் வளாகத்தில்  அமைதியான தியானத்தை மேற்கொண்ட பின்னர் சி.எப்.டி பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 25 முதல் 30 வரையான முன்னாள் போராளிகள் அங்கு சமூகமளித்திருந்தார்கள்.
 
வெளிப்படையாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் ஒரு அமைப்பை உருவாக்கும் யோசனை முன்னாள் புலி அங்கத்தவர்களுடன் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அமைதியான சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதின் பின்னரே உதயமானது. முன்பு குறிப்பிட்டதைப் போல இந்த கலந்துரையாடல்கள் யாவும் வித்தியாதரனின் முயற்சியின் பயனாகவே ஆரம்பிக்கப்பட்டன, சி.எப்.டியின் உருவாக்கத்துக்கு முக்கியமானதும் மற்றும் தீர்க்கமானதுமான ஒரு பங்களிப்பை அவர் ஆற்றியுள்ளார். சுயேச்சைக்குழு 4 இற்கு தலைமை தாங்குவதற்கு அப்பால் இந்த புதிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் வித்தியாதரன் பணியாற்றுகிறார். சி.எப்.டி நன்றாக நிலைபெற்றதும் அதை விட்டு தலைவணங்கி முழுமனதுடன் வித்தியாதரன் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது. சி.எப்.டியின் நிருவாகச் செயலாளரும் மற்றும் தமிழ் மொழியிலான பேச்சாளருமாக இருப்பவர் கதிர் என்கிற ராசையா கிருபாகரன், இவரும் யுத்தத்தில் தனது ஒரு காலை இழந்தவர்.
 
புலிகளின் மக்கள் முன்னணி
 
1989ல் எல்.ரீ.ரீ.ஈ ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியது. இது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் அரசாங்கத்துக்கும் மற்றும் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றபோது நடந்தது. தாங்கள் அமைதிப் பேச்சுக்களில் உண்மையாக இருப்பதையும் மற்றும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவதற்கு தயாராக இருப்பதையும் விளக்க வேண்டி எல்.ரீ.ரீ.ஈ இந்த அரசியற் கட்சியை ஆரம்பித்தது. அது ஒரு ஏமாற்று நடவடிக்கை. எல்.ரீ.ரீ.ஈ தான் ஜனநாயகத்தை தழுவுவதில் உண்மையாக இருப்பதாக பிரேமதாஸவையும் மற்றும் சமாதானத்துக்கு சாதகமான பரப்புரையாளர்களையும் ஏமாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி (பி.எப்.எல்.ரி) என்கிற கட்சியை ஆரம்பித்தது.
 
vithi2பி.எப்.எல்.ரி யின் பிறப்பு கொழும்பிலுள்ள கலதாரி மெரிடியன் ஹோட்டலில் வைத்து அறிவிக்கப் பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் உதவித் தலைவர் கோபாலசுவாமி மகேந்திரராஜா என்கிற மாத்தையா தலைவராகவும் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் யோகி என்கிற யோகரட்னம் யோகி பொதுச்செயலாளராகவும் இருந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் பி.எப்.எல்.ரி ஒரு மாநாட்டையும் நடத்தியது. அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் அதற்கு பார்வையாளர் அந்தஸ்தும் கிடைத்தது. ஜூன் 1990 ல் அரசாங்கத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் போர் மூண்டது. சில வருடங்களின் பின்னர் புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டளைப்படி பி.எப்.எல்.ரி கலைக்கப்பட்டது. பி.எப்.எல்.ரி யின் தலைவர் மாத்தையா கட்சிக்கு துரோகமிழைத்த குற்றச்சாட்டின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். பி.எப்.எல்.ரி யின் செயலாளர் யோகியும் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டு மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் கட்சியின் துயரக் கதை.
 
ஜனநாயகத்துக்கான வீரர்கள் அல்லது அறப்போராளிகள் தாங்கள் எல்.ரீ.ரீ.ஈக்கோ அல்லது பி.எப்.எல்.ரிக்கோ புத்துயிர் அல்லது மறுமலர்ச்சி அளிப்பதற்கு எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை என்பதை வலியுறுத்த பெரும் பாடுபட்டார்கள். தாங்கள் இப்போது ஜனநாயகத்தை  கையில் எடுத்திருப்பதால்  எல்.ரீ.ரீ.ஈயின் கடந்த காலத்துக்கான கதவுகளை மூடிவிட்டிருப்பதாக சி.எப்.டி சொல்கிறது. தங்கள் கட்சி எல்.ரீ.ரீ.ஈயுடன் ஒரு கரிமத் தொடர்பைக் கொண்டிருப்பதாகவும், மற்றும் தாங்கள் மேற்கொள்ளும் அரசியல், ஆயுதமற்ற எல்.ரீ.ரீ.ஈ அரசியலின் ஒரு விரிவாக்கம் மட்டுமே என தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்று சி.எப்.டி விரும்புகிறது. அதே நேரத்தில் ஸ்ரீலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் மற்றும் உலகத்துக்கும் தாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் வன்முறையான கடந்தகாலத்தினை முற்றாகத் துடைத்தெறிந்து விட்டதாகவும் மற்றும் மாமிச உண்ணிகளான உறுமும் புலிகளில் இருந்து தாவர உண்ணிகளான மெல்லிய  ஒலி எழுப்பும் பூனைகளைப் போல மாறிவிட்டதாகவும் சி.எப்.டி யினர் சொல்கிறார்கள்.
 
சி.எப்.டி தனது புலித் தோற்றத்தை வலியுறுத்த விரும்புகிறது, ஏனெனில் அதிகம் தமிழ் வாக்குகளை அது பெற்றுத் தர உதவும் என அது எண்ணுகிறது, ஆனால் அதேநேரம் அது பழைய எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு புதிய அவதாரத்தை எடுக்கவும் விரும்பவில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் இந்த மாயை தமிழில் அவர்கள் வீரர்கள் அல்லது போராளிகள் என்கிற பதத்தையும் ஆங்கிலத்தில் அறப்போர் நடத்துபவர்கள் என்கிற பதத்தையும் தெரிவு செய்திருப்பதிலிருந்தே நன்கு விளங்குகிறது. இருந்தும் சி.எப்.டி யிடம்  அரசியல் நோக்கங்களுக்காக எங்கெல்லாம் அல்லது எப்போதெல்லாம் சாத்தியப் படுகிறதோ அந்த இடத்தில் புலிகளின் மரபை இழுக்கும் போக்கு காணப்படுகிறது. சி.எப்.டி தனது உருவாக்கத்தை நல்லூர் கந்தசாமி வளாகத்தில் வைத்து கடந்த ஜூலையில் அறிவித்ததும், அதன் தேர்தல் விஞ்ஞ}பனத்தை ஆகஸ்ட் 4ல் சுதுமலை அம்மன் கோவிலில் வைத்து வெளியிட்டதும் இதற்கு நல்ல உதாரணங்கள்.
 
திரும்பவும் இந்த நகர்வில் ஒரு சங்கேத முறை தெரிகிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது ஜூலை 29, 1987ல். அதில் எல்.ரீ.ரீ.ஈ உட்பட்ட தமிழ் போராளிக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களுக்கு பிரியாவிடை வழங்கவேண்டும் என்கிற ஒரு நியமம் இருந்தது. 1987 ஓகஸ்ட் 4ல் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எல்.ரீ.ரீ.ஈ தனது ஆயுதப் போராட்டத்துக்கு முடிவு கட்டுகிறது என ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அந்த நிகழ்வு இடம்பெற்றது சுதுமலை அம்மன் கோவில் முன்றலில். சி.எப்.டி ஓரளவு கடந்த கால எல்.ரீ.ரீ.ஈ நினைவுகளை மீண்டும் எழுப்புவதற்காக, திட்டமிட்டு சுதுமலை அம்மன் கோவில் சுற்றாடலில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி அதன் தேர்தல் விஞ்ஞ}பனத்தை வெளியிட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. தேர்தல் சட்டங்களின்படி அரசியல் கூட்டங்கள் ஒரு சமய அல்லது வணக்க ஸ்தலங்களில் நடத்தக்கூடாது என்பதால் மானிப்பாய் பிரதேச காவல்துறையினர் அந்தப் பேரணிக்கான அனுமதியை மறுத்துவிட்டார்கள். எனவே சி.எப்.டி யினர் சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் வெறுமே முக்கியத்துவம் குறைந்த ஒரு நிகழ்வில் வைத்து தங்கள் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார்கள் தேனீ -பாகம் – 1
தொடரும்

No comments:

Post a Comment