Pages

Friday, August 14, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு!

Friday, August 14, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தல் பிரசாரங்கள் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில், அது தொடர்பில் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதம் தொடர்பிலும் இதன் போது பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது என்றும், இனவாதத்தையும் பிரிவினை வாதத்தை பரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று 5 பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
              

No comments:

Post a Comment