Pages

Sunday, August 9, 2015

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட இராணுவத்தினருக்குத் தடை!

Sunday, August 09, 2015
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இராணுவத்தினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாகவும், சிலர் அரசியல் கட்சிகளின் பணியகங்களில் செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எந்தவொரு வடிவிலான தேர்தல் பிரச்சாரங்களிலும், இராணுவத்தில் உள்ள எந்தவொரு நிலையில் உள்ள அதிகாரியோ, சிப்பாயோ ஈடுபடக் கூடாது என்றும் தொண்டர் படையில் உள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment