Pages

Thursday, August 13, 2015

மிருகங்களுக்கு(புலிகளுக்கு) வாக்களித்தாலும் வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் - சந்திரிக்கா

Thursday, August 13, 2015
மிருகங்களுக்கு (புலிகளுக்கு) வாக்களித்தாலும் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டி மற்றும் எஹலியகொட ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி செய்யப்பட்ட மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment