Pages

Monday, August 10, 2015

ஆட்சியாளர்களுக்கு நாட்டை செம்மை படுத்தும் வல்லமை இல்ல: ஜே.வி.பி!

Monday, August 10, 2015
ஆட்சியாளர்களுக்கு நாட்டை செம்மை படுத்தும் வல்லமை இல்ல: ஜே.வி.பி!
 
சமகால ஆட்சியாளர்களுக்கு நாட்டை செம்மைப்படுத்துவதற்கு வல்லமை கிடையாது என ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
அம்பாறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
 
ஆட்சியாளர்களுக்கு மேலும் இந்த நாட்டை சீர்செய்ய முடியாது என்பது உறுதியாகியுள்ளது. அதுமாத்திரமல்ல நாட்டை புதிய வழிக்கு கொண்டு செல்லவோ, அவர்களை மாற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே தற்போதைய சம்பிரதாயமாக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றம்சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment