Pages

Thursday, August 13, 2015

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மூடப்பட்ட சவக்குழிகளை தோண்டி எடுக்கும்': சுசில்!

Thursday, August 13, 2015
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மூடப்பட்ட சவக்குழிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் தோண்டி எடுக்கும்'' என்று தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ரணிலும் சந்திரிகாவும் தற்போது அக்கா தம்பி போல் இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "எதிர்வரும் 18ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் மீண்டும் ஆட்சி அமைக்கும். இதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட சவக்குழிகளை நாங்கள் மீண்டும் தோண்டி விசாரணைகளை முன்னெடுப்போம். ஐ.தே.க. காலத்தில் இடம்பெற்ற பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில்
 
பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டபோதும் சந்திரிகா அதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமைக்குக் காரணம் இன்று தெரிகின்றது. இருவரும் தற்போது அக்கா - தம்பி போல இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜயவீர எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் ஐ.தே.கவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அநுரகுமார ரணிலுடன் அண்ணன் - தம்பி உறவு கொண்டுள்ளனர்'' - என்றார்.

No comments:

Post a Comment