Pages

Wednesday, August 12, 2015

புள்ளடியிடப்பட்ட தபால் வாக்குச்சீட்டை பேஸ்புக்கில் பதிவேற்றிய கஜேந்திரகுமாரிடம் சிஐடி விசாரணை!

Wednesday, August 12, 2015
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நேற்று நான்கு மணிநேரம் விசேட குற்றபுலனாய்வு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை 10.30 இல் இருந்து பிற்பகல் 2.30 வரை இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது.
 
தபால் மூல வாக்களிப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு புள்ளடியிட்ட வாக்குச் சீட்டின் புகைப்படத்தினை தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் பதிவேற்றியமை தொடர்பிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதன்போது அப் புகைப்படம் எவ்வாறு பெற்ப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதுடன் அவரது முகப்புத்தகத்தை பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கைத் தொலைபேசியும் சீல் வைக்கப்பட்டு பொலிசாரால் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment