Monday, August 10, 2015
இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார். இறுதியாக தடுத்து வைக்கப்படிருந்த அரசியல் கைதி சரத்
பொன்சேகாவே எனவும் அவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையால் தற்போது
அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை என அவர் பிபிசிக்கு
தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட குண்டு வைத்தல், கொலை செய்தலுடன்
தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக
கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து
வைக்கப்பட்டிருப்பவர்களையும் அரசியல் கைதிகளாகவே கருதவேண்டும் என சில
நாட்களுக்கு முன் முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின்
தலைவருமான சரத் பொன்சேகா, பிபிசிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment