Pages

Friday, August 7, 2015

மாகாண அமைச்சர்கள் ஆறு பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து நீக்கம்!

Friday, August 07, 2015
மாகாண அமைச்சர்கள் ஆறு பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
 
இதற்கமைய ஊவா மாகாண சபை உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஹரீந்திர தர்மதாஸ்,  மேல் மாகாண சபை உறுப்பினர்களான
 
நிஷாந்த வர்ணசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகோரல மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர் ஹெவா அந்தனிகே பியசேன, ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களில் இவர்கள் போட்டுயிடுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment