Saturday, August 08, 2015
நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரனை மிஸ்டர் என்கிறார்கள். ஆனால் நாட்டில் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்து சுதந்திரத்தை கொண்டுவந்த என்ன கொலையாளி என்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட போது எனக்கு முன்னைய ஆட்சியில் இருந்த தலைவர்கள் சமாதானத்திற்காக பிரபாகரனிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் அவர்களையெல்லாம் பிரபாகரன் அடித்து விரட்டினார். பிரபாகரனை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன்.
அதன் படி பிரபாகரனை வீழ்த்தினேன். ஆனால் தற்போது எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு என்மீது சேறுபூச முயற்சி செய்கின்றனர் முன்னைய ஆட்சியாளர்கள் என தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மேடையொன்றில் தமிழீழத் தேசிய தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என குறிப்பிட்டு இருந்தார். அவ்வேளை கைதட்டல்கள் ஓங்கி ஒலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.











No comments:
Post a Comment