Pages

Sunday, August 16, 2015

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்திற்கு வாக்கு பெட்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன!

Sunday, August 16, 2015
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 வது நாடாளுமன்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம் பெறவுள்ளன.

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்புக்கள் இடம் பெறவுள்ளன.

இதற்காக, ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 491 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மற்றும் அநுராதப்புரத்தில் இடம் பெயர்ந்தவர்களுக்காக 19 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க வருகை தரவுள்ள வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள அட்டையை கொண்டு வர வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

196 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 35 கட்சிகள் மற்றும் 201 சுயேச்சை குழுக்களை சேர்ந்த 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் இந்த முறை போட்டியிடுகின்றனர்.

நாளை வாக்களிப்பு இடம் பெறவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

இந்தநிலையில், வாக்கு பெட்டிகள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று மாலையுடன் நிறைவு பெற்றுள்ளன.

No comments:

Post a Comment