Pages

Monday, August 17, 2015

அமெரிக்காவில் 68 இந்தியர்கள் கைது!

Monday, August 17, 2015
வாஷிங்டன் : வாஷிங்டனில் 68 இந்தியர்கள் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு புலம் பெயர் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ள தகவல் படி, முறையான ஆவணங்களின்றி, நாட்டுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள், வாஷிங்டன்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் கடந்த சில மாதங்களில் வெவ்வேறு காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment