Pages

Monday, August 17, 2015

500 மீற்றர் சுற்றுவட்டம் வாக்குச் சாவடியாகவே கருதப்படும்!

Monday, August 17, 2015
வாக்கெடுப்பு நிலையம் அமைந்துள்ள 500 மீற்றர் சுற்றுவட்டம் வாக்குச் சாவடியாகவே கருதப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
 
வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் வரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்பட்டால் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
 
வாக்களிப்பு நிலையத்திலிருந்து ஆகக்கூடியது 500 மீற்றர் தொலைவில் பொதுமக்கள் கூட்டமாக கூடிநிற்பது மற்றும் உரக்கப் பேசுவது என்பன தேர்தல் விதிகளை மீறும் செயல்கள் ஆகையினால் அதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
 
இல்லையேல், மக்கள் கூட்டத்தை கலைக்க ஆகக்கூடிய பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்படுவது உறுதியென்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment