Pages

Wednesday, August 5, 2015

மத்தியப் பிரதேசத்தில் தொடரூந்து ரயில் விபத்து! 24 பேர் பலி; 25 பேர் காயம்!

Wednesday, August 05, 2015
மத்திய பிரதேசத்தில் 2 ரெயில்கள் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலும், மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் கிரியா எனும் கிராமத்தின் வழியாக சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
இச்சம்பவம் குறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு பொலிஸ் எஸ்.பி. பிரேம் பாபு சர்மா கூறும்போது,
 
காமயானி ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு மச்சக் ஆற்றில் கவிழ்ந்ததாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. மச்சக் ஆற்றின் மேம்பாலத்தை கடக்கும் போது ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மச்சக் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் ரயில் தண்டவாளத்தை மூழ்கும் அளவுக்கு பாய்வதால் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த விபத்து நடந்த சில நிமிடங்களில் அதே ரயில்வே மேம்பாலத்தில் வந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம் புரண்டது. இந்த ரயில் மும்பையில் இருந்து ஜபல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இரண்டு ரயில்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.
 
இந்நிலையில் இரண்டு ரயில்கள் ஒரே நேரத்தில் தடம் புரண்ட விபத்தில் இதுவரை 24 பேர் பலியாகியதாக மத்தியப் பிரதேச மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000-மும் வழங்கப்படும் என ரயில்வே துறை
 
அறிவித்துள்ளது.
இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ரயில்வே மத்திய மண்டல பாதுகாப்பு ஆணையர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment