Wednesday, August 5, 2015

காஷ்மீர் என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கைது; ஒருவர் பலி: எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி!

Wednesday, August 05, 2015
காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற எல்லை பாதுகாப்புப் படை வாகனத்தை குறிவைத்து இன்று காலை (புதன்கிழமை) தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
 
காஷ்மீரில் உத்தம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
 
இத்தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காஷ்மீரில் உத்தம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
ல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் அருகில் இருந்த பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து அங்கிருந்த 3 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
 
இதனையடுத்து அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து நடந்த சண்டையில் தீவிரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டார்.
 
இது குறித்து போலீஸ் கமிஷனர் ஷாஹித் இக்பால் சவுத்ரி கூறும்போது, "எல்லைப் பாதுகாப்புப் படை வாகனத்தை தாக்கிய தீவிரவாதிகளுள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டார். பிணைக்கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். ஆபரேஷன் முடிவுக்கு வந்தது" என்றார்.
 
இதற்கிடையில் தீவிரவாதிகளுள் ஒருவரை பாதுகாப்புப் படையினர் உயிருடன் சிறை பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
எல்லையில் அத்துமீறல்:
 
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள இந்திய நிலைகளையும், கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் இன்றும் (புதன்கிழமை) இரண்டாவது நாளாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இன்று நடந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காயமடைந்தார்.
 
முன்னதாக, நேற்று (செவ்வாய்கிழமை) பர்க்வால் பகுதியில் ஹமீர்புர் கோனா என்ற இடத்தில் பீரங்கி குண்டு விழுந்து வெடித்ததில் சஞ்சய் குமார் என்ற 22 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
 
கடந்த ஜூலை மாதம் முழுவதும் எல்லையில் 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மாதம் (ஆகஸ்ட்) தொடக்கத்திலிருந்து இதுவரை 9 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...
 
12 நாட்களுக்கு முன்பே இந்தியாவுக்குள் நுழைந்தோம்: பிடிபட்ட தீவிரவாதி தகவல்!
 
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி 12 நாட்களுக்கு முன்பே இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூரில் 3 பேரை பிணையக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து கவச வாகனங்கள் மூலம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக உதம்பூருக்கு எல்லை பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது கவச வாகனங்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் பிடிபட்டார்.

உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் உஸ்மான் கான் என்பதும் அவன் பாகிஸ்தானில் உள்ள பைசாலாபாத்தை சேர்ந்தவன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே உஸ்மானிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் இந்தியாவுக்குள் 12 நாட்களுக்கு முன்பே நுழைந்திருந்திருப்பது தெரியவந்துள்ளது.

எல்லை பாதுகாப்பு படையினரால் பிடிபட்டபோதும் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் இயல்பாக உஸ்மான் சிரித்துக்கொண்டே சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment