எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் தான்-
பேசாமல் இருக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
தெரிவித்தார். பிரம்மகுமாரிகள் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா
நிகழ்வில் இன்று கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம், 'உங்களுக்கு
எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக பேசப்படுகின்றதே,
இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், 'நான்
எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க தற்போது தயாரில்லை. எதிர்வரும் தேர்தல்
வரையில் நான் ஊமையாகவே இருக்கப் போகின்றேன் நான் பேசியதாக அண்மையில்
இணையங்களில் வெளியான வீடியோ தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன்
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


No comments:
Post a Comment