Pages

Wednesday, July 29, 2015

முழு இலங்கையையும் வை-பை தொழில்நுட்பம் மூலமாக இணைக்கும்: கூகுள் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கிடையில் வரலாற்று முக்கியத்துவம்மிக்க ஒப்பந்தம்!

இக்காணொளியை பார்வையிடவும்:
Wednesday, July 29, 2015
கூகுள் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கிடையில் வரலாற்று முக்கியத்துவம்மிக்க ஒப்பந்தமொன்று நேற்று  கைச்சாத்திடப்பட்டது.
முழு இலங்கையையும் வை-பை தொழில்நுட்பம் மூலமாக இணைக்கும்,  அனைவருக்கும் இணையம் என்ற அடிப்படை நோக்குடனான திட்டமொன்றுக்கான ஒப்பந்தமே அது.
இராட்சத பலூன்கள் ஊடாக வை-பை வழங்கும் ' கூகுளின் புரஜெக்ட் லூன் ' என்றழைக்கப்படும் மேற்படி திட்டமானது இலங்கையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் பறக்கும் மேற்படி பலூன்கள் கம்பியில்லா இணையத் தொடர்பை வழங்கக்கூடியன
 
பலூன்களானது நடமாடும் தொலைத் தொடர்புக் கோபுரங்களாக செயற்பட்டு பின் தங்கிய பிரதேசங்களுக்கும் இணையத்தை வழங்கும் மையமாக திகழும். இவை எந்தக் காலநிலையையும் தாக்குப்பிடிக்க க் கூடிய மூலகத்தினால் ஆக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பரிமாற்றல் செலவு குறைக்கப்படுவதால் , தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாவனையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையத் தொடர்பை வழங்க முடியும்.

No comments:

Post a Comment