Pages

Tuesday, July 28, 2015

புலிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்!

Tuesday, July 28, 2015
புலி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

தற்போதைய  அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கரிசனை காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் புலி உறுப்பினர் ஒருவர் சயனைட் வில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு காரணிகளின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment