Pages

Thursday, December 18, 2014

மைத்திரிபாலவுக்கும் புலம்பெயர் புலிகளின் அமைப்புக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படுகின்றது: ஜனாதிபதித் தேர்தலில் TNA யின் ஆதரவு மைத்திரிக்கு: டிலான் பெரேரா!

Thursday, December 18, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவதென்ற தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் அதனை இறுதி நேரம் வரையில் வெளியிட வேண்டாம் என மைத்திரிபால சிரிசேன அக்கட்சியிடம் அறிவித்துள்ளதாகவும் .
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தம் நாட்டுக்கு வெளிப்பட்டால் தனக்கு பாதிப்பு என்பதனாலேயே இறுதி நேரம் வரையில் அதனை மறைத்து வைத்துள்ளனர்.
 
மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதித் தேர்தலுக்கு வந்தவுடனேயே அவருக்கு ஆதரவு வழங்குவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
 
இதன் மூலம் மைத்திரிபாலவுக்கும் புலம்பெயர் புலிகளின்  அமைப்புக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் நேற்று நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. யின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment