Pages

Wednesday, December 17, 2014

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறானே!! “இவன் ரொம்ப நல்லவன்டா!!

Wednesday, December 17, 2014
இலங்கை::மூக்காலும் வாயாலும் இரத்தம் சொட்டினாலும்  வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசன்  மத்திய அமைச்சருடன் அன்பாக இருப்பதைப் பாா்த்து யாரும்  ஆச்சா்யப்படாதீா்கள். ஏனெனில் இது புலி கூட்டமைப்பின் அரசியல் நாடகம். 


ஒரு வேளை ஐங்கரநேசனைப் பாா்த்து அமைச்சா் “இவன் ரொம்ப நல்லவன்டா! என்று சொல்லிப் போட்டாரோ??”
இதே வேளை இன்று யாழ் கச்சேரியில் நடைபெற்ற சம்பவத்தில் ஐங்கரநேசன் அவா்கள் தனக்கு தானே தாக்கிக் கொண்டதாக அமைச்சா்  டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளா்களுக்கு கூறியுள்ளாா்.
 
முதன் முதலாக போரில் விழுப்புண் அடைந்தார் புலி கூட்டமைப்பின்  ஐங்கரநேசன். புலிகளின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வைத்து வாக்கு வாங்கி வடக்கு மாகாணசபைத் தோ்தலில் வெற்றியீட்டிய வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சா் முதல் முதலாக கச்சேரியில் இடம் பெற்ற போரில் விழுப்புண் அடைந்துள்ளார். அதுவும் தண்ணீா்ப் போத்தலால் தாக்கியதாக விழுப்புண் அடைந்ததாகத் தெரியவருகின்றது.
 
அதுவும் இவா் புலிகளின் தமிழீழத்தை மீட்பதற்காகவோ அல்லது தமிழ்மக்களின் விடிவுக்காகவோ விழுப்புண் அடையவில்லை. தனது கட்சிக்காரா்களின் அடாவடியான நடவடிக்கைகளுக்குத் துணை போய் யாழ் மாவட்ட மக்களின் நன்மைக்காக நடாத்தப்பட்ட அபிவிருத்திக் கூட்டத்தை குழப்பும் நடவடிக்கைக்காகவே விழுப்புண் அடைந்துள்ளார். 
 
இவ்வாறான குப்பாடிக் புலிகூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் காலம் பொதுமக்கள் வாக்குகளால் பதில் சொல்வார்கள் என்பது வெளிப்படை.
 
அத்துடன் ஊடகங்களுக்கு முன்னாள் பொதுமக்கள் பார்ப்பதற்காக படம் காட்டும் இந்தக் குப்பாடிக் புலிகூட்டமைப்பு வடக்கு மாகாணசபையின் எல்லையைத் தாண்டி ஏனைய மாகாண எல்லைக்குச் சென்றவுடன் நானும் நீயும் அண்ணணும் தம்பியும் என்ற தோரணையுடன் தென் பகுதி அரசசார்பு அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக் கூத்தாடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

No comments:

Post a Comment