Pages

Thursday, December 11, 2014

மெரினாவுக்கு சுற்றுலா வந்த இலங்கை தமிழர்களின் பாஸ்போர்ட் அபேஸ்!

Thursday, December 11, 2014
சென்னை: மெரினாவுக்கு சுற்றுலா வந்த இலங்கை தமிழர்களின் 13 பாஸ்போர்ட்டுகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கையை சேர்ந்த தமிழ் இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் சென்னை போரூரில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர்கள் ஜெர்மன் மற்றும் லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலை மெரினாவுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது, தங்களது 13 பாஸ்போர்டுகளை ஒரு கைபையில் போட்டு, கடற்கரையில் வைத்து விட்டு அனைவரும் கடலில் கால் நனைக்க சென்றனர். சிலர் கடலில் குளிக்கவும் செய்தனர்.
 
இதை நோட்டம் விட்ட ஆசாமிகள், பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்த கைப்பையை நைசாக திருடி சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு வந்த இலங்கை தமிழர்கள் பாஸ்போர்ட் மற்றும் பணம் அடங்கிய கைப்பை திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்கள் பாஸ்போர்ட்டுகள் இல்லாததால் சொந்த நாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment