Thursday, December 11, 2014

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில மீண்டும் ஆளும் கட்சிக்கு தாவியுள்ளார்!

Thursday, December 11, 2014
இலங்கை::
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் உதய கம்மன்பில மீண்டும் ஆளும் கட்சிக்கு தாவியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கம்மன்பில தெரிவித்து தனது மாகாண அமைச்சுப் பதவியையும் துறந்திருந்தார்.

அண்மையில் ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் மைத்திரிபால சிறிசேன உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்ட போது, கம்மன்பில ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சற்று முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் பங்கேற்ற உதய கம்மன்பில, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.


இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகிய ஜாதிக்க ஹெர உருமயவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தாம் மீண்டும் சுயாதீனமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைய தீர்மானித்ததாக அவர் இன்று சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

17ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அண்மையில் விகாரமாதேவி பூங்காவில் எதிர்கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
 
இனவாதத்தை சட்டரீதியாக மாற்றியமைத்த- நடைமுறையில் தோல்வியை தழுவிய இன்று பிணமாகிப்போன 17ஆவது திருத்தச்சட்டத்தை தோளில் வைத்துக்கொண்டுள்ளள்ள ஒருவருடன் சிறந்த ஆட்சியை கட்டியெழுப்ப முடியாது என அவர் இதன் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment