Thursday, December 18, 2014

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போலியான முறையில் சாட்சியங்களைதிரட்டியுள்ளது: பாதுகாப்பு அமைச்சு!


Thursday, December 18, 2014
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போலியான முறையில் சாட்சியங்களை திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.இந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களை திரட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வெற்று படிவங்களில் வடக்கு மக்களிடம் கையொப்பங்களை திரட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் அமைப்பு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வெற்று படிவங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 

No comments:

Post a Comment