Tuesday, December 23, 2014
இலங்கை::நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் தொண்டர்படையினைத் தொடர்ந்தும் பேணுவது அவசியமற்றதென்றும் தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன.
ஆனால் மிகுந்த தியாகத்துக்கு மத்தியில் பெற்ற இவ்வெற்றியை நிலையாக பேனுவதற்கும் யுத்தத்தின் பின்னரான தொடர்ச்சியான அபிவிருத்திக்கும் இராணுவத்தின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக பேணவேண்டும் என்ற விடயத்திலும் ஜனாதிபதி அவர்கள் உறுதியாக உள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (டிச.22) தெரிவித்தார்.

செயலாளர் திரு. ராஐபக்க்ஷ அவர்கள் நேற்று காலை வாஹல்கடவிலிலுல்ல வெடிஹிட்டிய கன்ட விகாரைக் நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாடும் நிகழ்வில் கலந்து கொண்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இக் கருத்தை தெரிவித்தார்.
ஊவாவெல்லச மற்றும் வெடிஹிட்டிய கன்ட விகாரையின் பிரதான தேரரான கௌரவ ஹீல ஞானநந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கடற் படையின் சிவில் பொறியியல் பிரிவினால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மத தலைவர்களினால், மத ஸ்தானங்களை அபிவிருத்தி செய்வதற்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நாடு பூராகவும் வடக்கு மற்றும் கிழக்கு பிர தேசங்கள் உள்ளடங்கலாக 600 க்கு மேற்பட்ட வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக 5000 க்கும் அதிகமான முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர் என்று கூறினார்.
மேலும் இலங்கை முப்படையின் மத சங்கங்களின் நிதியைப் பயன்படுத்தி அதிகமான விகாரைகள், பள்ளிவாயல்கள், தேவாலயங்கள் ,இந்து ஆலயங்கள் உற்பட பல மத ஸ்தானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை மறுக்குமுகமாக அவர் தொடர்ந்து குறிப்பிடும் பொழுது பாடசாலைகள் மற்றும் முக்கிய ஸ்தானங்களை அபிவிருத்தி செய்தல், வெள்ள நிவாரண செயற்பாடுகள், தேசிய ரீதியில் அனர்த்த உதவிகள் மற்றும் டெங்கு ஒழிப்பு என பல தரப்பட்ட சந்தர்பங்களிலும் இராணுவத்தினரின் பங்களிப்பு குறித்தும் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ மஹா சங்க, கடற் படைத்தளபதி, சிரேஷ்ட
கடற்படை அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பெருந் தொகையான மக்களும் கலந்து
கொண்டனர்.

No comments:
Post a Comment